News April 27, 2025
எம்.சாண்ட் விலை ₹1000 குறைகிறது

கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் M-சாண்ட், P-சாண்ட் ஆகியவற்றின் விலையை குறைத்து விற்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கல் குவாரி, க்ரஷர், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் கூட்டம் இன்று காலை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது, M-சாண்ட் விலையை மெட்ரிக் டன்னுக்கு ₹1000 குறைத்து விற்க விற்பனையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதனால், கட்டுமானப் பணிகள் விறுவிறுப்படையும்.
Similar News
News January 27, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 593 ▶குறள்: ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். ▶பொருள்: ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.
News January 27, 2026
தொப்பியின் விலை ₹4.2 கோடி!

ஆஸி. ஜாம்பவான் டான் பிராட்மேனின் தொப்பி ₹4.2 கோடிக்கு லாயிட்ஸ் கோல்ட் கோஸ்ட் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு தன்னுடைய தொப்பியை பிராட்மேன் பரிசாக அளித்தார் . ‘DG பிராட்மேன்’ & ‘SW சோஹோனி’ பெயர்கள் பொறிக்கப்பட்ட இத்தொப்பி, கடந்த 2024-ம் ஆண்டில் ஏலம்போன அவரது மற்றொரு தொப்பியை (₹2.63 கோடி) விட அதிக விலைக்கு சென்றுள்ளது.
News January 27, 2026
என்னை வம்புக்கு இழுக்காதீர்: தளபதிக்கு ஜோதிமணி WARNING

‘ஆட்சியில் பங்கு’ என பேசி வரும் ஜோதிமணிக்கு சீட் கொடுக்க கூடாது என்று திமுக <<18969847>>MLA தளபதி <<>>கூறியிருந்தார். இந்நிலையில், தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது; களத்தில் நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதி அனுசரித்துப் போகிறோம், அமைதி காக்கிறோம். இதுபோன்று பேசி, CM ஸ்டாலினை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது என ஜோதிமணி எச்சரித்துள்ளார்.


