News April 27, 2025

ரேஷன் பருப்பில் கலப்படமா? ஆய்வு செய்ய உத்தரவு

image

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த பருப்பில் கலப்படம் செய்யப்பட்டதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அண்மையில் கண்டுபிடித்தார். இதுதொடர்பாக 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் வெளியானதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வாணிப கிடங்குகள், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து, பருப்பின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News

News March 19, 2026

BREAKING: அதிமுக கூட்டணியில் இணைந்தார்

image

திமுக கூட்டணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுகவும் கூட்டணியை பலப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் G.B.பச்சையப்பன், EPS-ஐ சந்தித்து 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளார். சிகப்பு, மஞ்சள், சிகப்பு நிறத்திலான கொடியை(தவெக) விஜய் பயன்படுத்தக்கூடாது என வழக்குத் தொடுத்தது பச்சையப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 19, 2026

திமுக வைக்கும் டிமாண்ட்.. முரண்டு பிடிக்கும் விசிக!

image

திமுக கூட்டணியில் 8 தொகுதிகளை ஒதுக்க விசிக, அழுத்தம் கொடுத்து வருகிறது. அதில், குறைந்தது 3 பொதுத் தொகுதிகள் வேண்டும் என திருமாவளவன் அழுத்தமாக கேட்டுள்ளாராம். ஆனால், திமுக தலைமையோ 6 சீட்டுகள்; அதில் 1 பொதுத் தொகுதி, 1 தனித் தொகுதியில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என சொன்னதாக தெரிகிறது. அதனை மறுத்த திருமாவளவன் ‘பானை’ சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

News March 19, 2026

டெல்லி விரையும் EPS

image

தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிக் கட்ட ஆலோசனை நடத்துவதற்காக EPS இன்று டெல்லி செல்ல உள்ளார். அங்கு, அமித் ஷா, பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும், இன்றைய தினமே பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக 35 தொகுதிகள் கேட்ட நிலையில், 27 தொகுதிகளை EPS இறுதி செய்துள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!