News April 5, 2024

ஐபிஎல்லில் புதிய சாதனை

image

நடப்பு ஐபிஎல் தொடரில், மேலும் ஒரு புதிய சாதனை பதிவாகியுள்ளது. நடந்து முடிந்த 17 போட்டிகளில், இதுவரை 300 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில், முதல் 17 போட்டிகளில், 300 சிக்சர்கள் விளாசியது இதுவே முதல்முறை ஆகும். குறிப்பாக, MI – SRH இடையேயான போட்டியில் மட்டும் 38 சிக்சர்கள் பதிவாகியுள்ளது. 2023இல் 259 சிக்சர்களும், 2020இல் 258 சிக்சர்களும், 2018இல் 245 சிக்சர்களும் பதிவாகியுள்ளது.

Similar News

News January 19, 2026

சிறுவன் கைகளில் மும்பை மேயர் பதவி!

image

தேர்தல் முடிந்தாலும், மும்பை மேயர் யார் என்பது சஸ்பென்ஸாக இருக்க காரணம் அங்குள்ள குலுக்கல் முறை! மும்பை மேயர் பதவி 2.5 ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இடஒதுக்கீடு (பெண்/SC/ST/OBC/பொது) செய்யப்படும். சீட்டு எழுதி குலுக்கி போட்டு, மாநகராட்சி பள்ளி சிறுவன் ஒருவன் எடுப்பான். அதில் வரும் பிரிவை சேர்ந்த வேட்பாளர்களில் இருந்து மேயர் தேர்வு செய்யப்படுவார். அடுத்தவாரம் இந்த தேர்வு நடைபெறவுள்ளது.

News January 19, 2026

BREAKING: செங்கோட்டையன் முடிவை மாற்றினார்

image

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக Ex அமைச்சர்கள் இருவரை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், அவர்கள் பிடி கொடுக்காததால், தனது கவனத்தை தற்போது திருப்பூரை சேர்ந்த ஒரு Ex அமைச்சரின் பக்கம் திருப்பியுள்ளார். குறிப்பாக, வரும் தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டதால் அந்த Ex அமைச்சர், EPS மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News January 19, 2026

அதிமுகவில் மீண்டும் OPS? செல்லூர் ராஜு கொடுத்த அப்டேட்

image

தொகுதி மாறப்போவதாக வரும் தகவல் வதந்தி எனக் கூறிய செல்லூர் ராஜு, மதுரை மேற்கு தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சி எடுப்பதாகவும், அதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், OPS, TTV இணைப்பை பற்றி EPS தான் முடிவெடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!