News April 27, 2025

ஈரோடு: பொன்காளியம்மன் கோயில் சிறப்பு

image

ஈரோடு மாவட்டம் தலையநல்லூர் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு பொன்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக பொன்காளியம்மன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தடை அகலும், சகல செல்வமும் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News April 29, 2025

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து 

image

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள ஓலப்பாளையத்தில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு வட மாநில வாலிபர் ஒருவர் பானி பூரி கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சென்ற பிறகு நள்ளிரவில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது. இத்தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 29, 2025

Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

image

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். ஈரோட்டில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.

News April 28, 2025

ஈரோடு: மதுக்கடைகளுக்கு விடுமுறை

image

தொழிலாளர் தினமான மே மாதம் 1-ம் தேதி, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே மே 1-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

error: Content is protected !!