News April 27, 2025
இன்றே கடைசி…வெளியேறும் பாகிஸ்தானியர்கள்

ஐதராபாத்தில் உள்ள 213 பாகிஸ்தானியர்களும் இன்றே சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டுமென ஹைதராபாத் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டுமென அமித்ஷா உத்தரவிட்டார். இந்நிலையில், ஹைதராபாத்தில் சுற்றுலா-மருத்துவ விசாவில் தங்கியுள்ள 213 பேரின் விசாக்கள் ரத்தாகின. இரவுக்குள் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுகின்றனர்.
Similar News
News April 28, 2025
BREAKING: பொங்கலுக்கு ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000

பொங்கலுக்கு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 9 முக்கிய அறிவிப்புகளை ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-ல் இருந்து ரூ.6,000-ஆக அதிகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
News April 28, 2025
ரசிகர்கள் எப்போதும் அதை செய்ய வேண்டாம்: சூர்யா

படத்திற்காக மட்டுமே ‘ரெட்ரோ’வில் சிகரெட் பிடித்ததாக தெரிவித்த நடிகர் சூர்யா, ரசிகர்கள் புகைபிடிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒருமுறை தானே என ஆரம்பித்தால் அதனை விட முடியாது என்றும், அது உங்களை அடிமையாக்கி விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புகைப் பழக்கத்தை எப்போதும் ஆதரிக்க மாட்டேன் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யாவின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
News April 28, 2025
கோடை விடுமுறையில் ஆதார் புதுப்பிப்பு: பள்ளிக்கல்வித்துறை

கோடை விடுமுறை காலத்தில் ஆதாரை புதுப்பிக்க மாணவர்களை வலியுறுத்த வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதாெடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் அருகிலுள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள், வட்டார வள அலுவலகங்களில் மாணவர்களின் ஆதாரை புதுப்பிக்க தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றோரிடம் வலியுறுத்த கேட்டுள்ளது.