News April 27, 2025

நசியனுரில் கணவனை இழந்த பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

image

நசியனுார், ராயர்பாளையத்தை சேர்ந்த, கணவனை இழந்து தனியே வசிக்கும், 60 வயது பெண், தனக்கு ஆண் துணைதேவை என, திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த திண்டுக்கல சேர்ந்த மனோஜ்குமார் 29 விண்ணப்பிக்க, இருவரும் பேசி பழகி உள்ளனர். பின் அந்த பெண்ணிடம் 4 பவுன் நகையை திருடி சென்றான், அந்த பெண்மணி சித்தோடு போலீஸில் புகார் அளிக்க அந்த வாலிபரை கைது செய்த போலிஸார் கோபி கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News

News September 14, 2025

பர்கூர் மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தம்

image

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் வட்டம், கொள்ளேகால் செல்லம்பாளையம் சாலையில் நால்ரோடு முதல் கர்கேகண்டி வரை சாலை புனரமைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், சாம்ராஜ்நகர், கூடுதல் துணை ஆணையாளரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதால், 15.09 முதல் 25.09 வரை 6 சக்கரங்களுக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் பர்கூர் மலைப்பாதையில் சொல்லாமல் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லுமாறு ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News September 13, 2025

ஈரோடு: கள்ள சாராயம் காய்ச்சிய திமுக கவுன்சிலர் கைது

image

ஈரோடு, காஞ்சிக்கோவிலில் விவசாயத் தோட்டத்தில், சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சியதாக, பெத்தாம்பாளையம் பேரூராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார், அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்ற இருவரையும், ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் 12 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், 150லி ஊரலை அழித்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News September 13, 2025

ஈரோடு: பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

image

ஈரோடு மக்களே அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். உங்களின் டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHAREIT.

error: Content is protected !!