News April 5, 2024

ஹிமாசலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்

image

ஹிமாசலப் பிரதேசத்தில் 5.3 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹிமாசலப் பிரதேசத்தின் சம்பாவுக்கு அருகே நேற்றிரவு 9.34 மணிக்கு 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும், ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 அலகுகளாகப் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Similar News

News January 19, 2026

மீண்டும் 3 நாள்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

image

பொங்கல் விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டது. இனி எப்போது விடுமுறை வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ். ஆம்! ஜன.24, 25 (சனி, ஞாயிறு) மற்றும் ஜன.26-ம் தேதி குடியரசு தினம் என்பதால், தொடர்ந்து 3 நாள் விடுமுறை வருகிறது. எனவே, மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இப்போதே பயணத்தை திட்டமிடுங்கள்.

News January 19, 2026

பர்சனல் லோன் வேணுமா? முக்கிய அறிவிப்பு

image

‘உங்களுக்கு ₹10 லட்சம் Pre-approved Loan அப்ரூவ் ஆகியுள்ளது’ என்று உங்களில் பலருக்கும் போனில் மெசேஜ் வந்திருக்கலாம். அப்படி வந்தால், ஆஹா லோன் கிடைத்துவிட்டது என்று உடனே அப்ளை செய்துவிடாதீர்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவசரப்பட்டு எந்த ஒரு லோன் ஆஃபரையும் உடனே ஏற்க வேண்டாம். நிபந்தனைகளை முழுமையாகப் படித்து, வட்டி & EMI விவரங்களை உறுதி செய்தபின் ஏற்பதே பாதுகாப்பானதாம். SHARE IT!

News January 19, 2026

2026-ல் திமுக தேர்தல் அறிக்கை தான் கதாநாயகி: கனிமொழி

image

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்ட அதே திட்டத்தை தான் EPS மீண்டும் அறிவித்துள்ளதாக கனிமொழி விமர்சித்துள்ளார். ஓசூரில் பேசிய அவர், பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் நோக்கில், மகளிர் உரிமைத் தொகை என CM ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் குலவிளக்கு என்பது பெண்களை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என யோசித்து பாருங்கள் என்றும், 2026-ல் திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!