News April 27, 2025
சேலம் கலெக்டர் கடும் எச்சரிக்கை!

சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடர்பாக வரப்பெற்ற அனைத்து புகார்களுக்கும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 13, 2025
கிராம சபைக் கூட்டம்- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் ஆக.15- ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார். கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி, மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
News August 13, 2025
சேலம்: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி!

சேலம் மாவட்டத்தில் சேர்ந்தவர்களுக்கான 2025 முதல்வர் கோப்பை மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் இந்த போட்டியில் பங்கு பெற 16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் இணையதளத்தில் விண்ணப்பிக்க https://cmtrophy.sdat.in (அல்லது) https://sdat.tn.gov.in பதிவு செய்து கொள்ள சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
சுதந்திர தின விடுமுறை – 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சுதந்திர விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நாளை (ஆக.14) முதல் ஆக.18- ஆம் தேதி வரை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் குணசேகரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் இருந்து மதுரை, கோவை, ஓசூர், பெங்களூரு, சென்னை, சிதம்பரம் உள்ளிட்ட நகரங்களுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.