News April 27, 2025
நுரையீரலில் 8 cm கத்தி : ஷாக்கிங் ஆப்ரேஷன்

சந்தோஷ் தாஸ் என்பவரின் நுரையீரலில் இருந்து 8 cm நீளமுள்ள கத்தியை ஒடிசா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். 3 வருடங்களுக்கு முன்பு பெங்களுருவில் கத்தியால் குத்தப்பட்ட தாஸுக்கு சிகிச்சை முடிந்தபின்பும் வறட்டு இருமல் இருந்துள்ளது. இதற்காக 8 மாதங்களாக சிகிச்சை பெற்ற நிலையிலும் குணமாகவில்லை. இந்நிலையில், சிடி ஸ்கேனில் கத்தி இருந்தது கண்டறியப்பட்டு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 29, 2025
2025 REWIND: ODI-ல் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள்!

2025 ODI-ல் இந்திய மகளிர் அணி, WC-யை வென்று சாதனை படைத்துள்ளது. மொத்தமாக 23 போட்டிகளில் விளையாடி 15-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய மகளிர் அணி வீராங்கனைகளின் அபாரமான பேட்டிங்கும் முக்கிய காரணம். 2025 ODI-ல் இந்தியாவுக்காக அதிக ரன்களை விளாசிய வீராங்கனைகளின் லிஸ்ட்டை அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். உங்களை யாருடைய இன்னிங்ஸ் மிகவும் கவர்ந்தது?
News December 29, 2025
பூஜை அறையில் இந்த 3 விஷயங்கள் இருக்கா..

வீட்டின் பூஜை அறையில் இருக்கும் இந்த பொருள்கள் எதிர்மறை ஆற்றலை கொடுக்கின்றன ✱பூஜை அறையில் முன்னோர்களின் படங்களை வைக்கக்கூடாது. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் ✱வாடிய, காய்ந்த பூக்களை அப்படியே பூஜை அறையில் மறந்தும் போட்டு வைக்காதீர்கள். அது வாஸ்துப்படி மிகவும் அசுபமானது ✱சங்குகளை கண்டிப்பாக வைத்திருக்ககூடாது. அது வாஸ்து தோஷத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.
News December 29, 2025
தங்கம் விலை மளமளவென குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை சர்வதேச சந்தையில் திடீரென இறங்குமுகம் கண்டு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $42(இந்திய மதிப்பில் ₹3,772) குறைந்து $4,441-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


