News April 27, 2025
நெல்லை: விடுமுறையில் சிறுவர்களின் விபரீத விளையாட்டு

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லையில் சிறுவர்கள் வெயிலையும் கவனிக்காமல் பொது இடங்களில் கூடி விளையாடி வருகின்றனர். மேலப்பாளையம் ரயில் நிலையம் பகுதியில் இன்று சில சிறுவர்கள் தண்டவாளத்தில் சிறிய ஜல்லிக்கற்களை அடுக்கி வைத்து அபாயகரமான விளையாட்டு விளையாடுகின்றனர். இதை அங்கு வந்த ரயில் பயணங்கள் சங்கத்தினர் கண்டித்து அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
Similar News
News April 28, 2025
வெளிநாட்டு வேலை மோசடி குறித்து போலீஸ் எச்சரிக்கை

நெல்லை மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என்று கூறி நூதன மோசடியில் ஈடுபடுவதாக மாவட்ட காவல்துறை ஒரு எச்சரிக்கை அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது; வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பகுதி நேர வேலை வாய்ப்பு என உங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் நம்பி ஏமாற வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு சைபர் காவல் தொடர்பு எண் 1930ஐ அழைக்கவும் என கூறியுள்ளனர். SHARE!!
News April 27, 2025
நெல்லை கோர விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரம் நான்கு வழிச்சாலையில் இன்று மாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News April 27, 2025
நெல்லையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி

நெல்லை மாவட்டம் நான்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் அருகே நான்கு வழிச்சாலையில் இரண்டு கார்கள் இன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் குழந்தை உள்பட4 பேர் பலியானதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு ஏர்வாடி போலீசார் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.