News April 27, 2025

IPL: MI முதலில் பேட்டிங்

image

மும்பையில் நடைபெறும் இன்றைய IPL போட்டியில் MI, LSG அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற LSG கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறார். MI, LSG என இரு அணிகளும் முறையே, 5 & 6-வது இடங்களில் இருப்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், DC, RCB அணிகள் மோதவுள்ளன.

Similar News

News April 28, 2025

அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு HAPPY NEWS!

image

அங்கன்வாடிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்க தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், ஆசிரியர்களுக்கு காலதாமதம் இல்லாமல் ஊதியம் வழங்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் மாதம் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Share it.

News April 28, 2025

அமைச்சர்களின் ராஜினாமா ஏற்பு

image

செந்தில் பாலாஜி, பொன்முடியின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் SC காட்டிய கெடுபிடியால் செந்தில் பாலாஜியும், சைவம், வைணவம் குறித்த பேச்சு சர்ச்சையானதால் பொன்முடியும் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. இருவரின் ராஜினாமா கடிதங்களையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதேநேரத்தில், மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் இன்று பதவி பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.

News April 28, 2025

GT vs RR: யாருக்கு கிடைக்கும் ஹாட்ரிக்?

image

ஹாட்ரிக் வெற்றியை பெற GT அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க RR அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும். 6 போட்டிகளில் வென்றுள்ள GT, இன்றிரவு வாகை சூடினால் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் செல்ல வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள RR-க்கு பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய பறிபோய்விட்டது. ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள இன்றைய ஆட்டத்தில் வெல்லப் போவது யார்?

error: Content is protected !!