News April 27, 2025
குமரியில் பொது இடத்தில் மது அருந்திய 742 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 25 நாட்களில் பொது இடத்தில் மது அருந்தியதாக 742 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் நேற்று தெரிவித்தனர்.
Similar News
News November 18, 2025
குமரி: பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன்

அழகப்பபுரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து நேற்று கீழே குதித்தான். படுகாயம் அடைந்த அவனை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் ஏன் குதித்தார்? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரும் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

குமரி: மிதிவண்டி இணைப்பு பணிக்கு ஆட்கள் தேர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2025 -26 ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மிதிவண்டி பாகங்கள் இணைக்கும் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. மிதிவண்டி தொழிலில் அனுபவம் உள்ள விருப்பமுள்ளவர்கள் நவ.21க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். ஷேர்.