News April 27, 2025
2026-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி.. உதயகுமார் உறுதி

2026 தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியமைப்பது உறுதி என்று EX அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2026 தேர்தலுக்கு அதிமுக வலுவான கூட்டணி அமைத்துள்ளதாகவும், ஆதலால் தேர்தலில் வெற்றி உறுதி என்றும் குறிப்பிட்டார்.
Similar News
News April 28, 2025
புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் இன்று (ஏப்.28) முதல் ஜூன் 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. CBSE விதிப்படி முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டு நடக்கிறது. இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 28, 2025
இந்தியாவில் வாழ விடுங்கள்: கெஞ்சும் பாக். பெண்!

இந்தியரை திருமணம் செய்து, 2 குழந்தைகளை பெற்று, 35 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் சாரதா பாய், தற்போது அவரது சொந்த நாடான PAK-கிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலக்கெடு முடிவதற்குள் நாடு திரும்ப ஒடிஷா போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அங்கு தனக்கென யாரும் இல்லை எனவும், தயவுசெய்து குடும்பத்தையும், தன்னையும் பிரித்துவிட வேண்டாம் எனவும் அவர் கெஞ்சியபடி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
News April 28, 2025
இபிஎஸ்-சை முன்னிறுத்தியே தேர்தலில் போட்டி: வேலுமணி

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இபிஎஸ்.சை முன்னிறுத்தியே போட்டி என்று அதிமுக EX அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய வேலுமணி, தேர்தலில் இபிஎஸ் பெயரை தெரிவித்தே மக்களிடம் வாக்குகள் கோரப்படும் என்று கூறினார். இபிஎஸ்.சா? ஸ்டாலினா? என்றே 2026 தேர்தல் போட்டி களம் இருக்கும் என்றும் எஸ்.பி. வேலுமணி குறிப்பிட்டார்.