News April 27, 2025

சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு?

image

சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ரசிகர்களிடையே ஹாட் டாபிக்காக இது மாறியுள்ளது. KGF படத்தை தயாரித்த ஹொம்பலே நிறுவனம் தான் இப்படத்தையும் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு – சுதா காம்போ.. எப்படி இருக்கும்?

Similar News

News April 28, 2025

6வது முறையாக அமைச்சரவை மாற்றம்.. CM சொல்லும் சேதி!

image

CM ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக <<16237354>>அதிரடி மாற்றம்<<>> செய்யப்பட்டுள்ளது. மூத்த தலைவரான பொன்முடி மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கட்சியில் மற்ற தலைவர்களுக்கான வார்னிங் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஏற்கனவே அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுவெளியில் கவனமாகப் பேசுங்கள் என CM அறிவுறுத்தியுள்ளார். இதனால், கட்சியில் மேலும், சிலர் மீது சாட்டை சுழற்றப்பட உள்ளதாம். உங்கள் கருத்து என்ன?

News April 28, 2025

பயத்தில் நாட்டை விட்டு ஓடும் பாக். தளபதிகள்!

image

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானை கதிகலங்க செய்துள்ளது. இந்தியாவின் பதிலடி குறித்த அச்சத்தில் அந்நாட்டு முக்கிய ராணுவ தளபதிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். தலைமை தளபதி ஆசிம் முனிர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில், தளபதிகளின் ராஜினாமா குறித்த லெப்டினண்ட் ஜெனரல் உமர் அகமத்தின் கடிதம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பாக். அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

News April 28, 2025

பொன்முடி அவுட்…விழுப்புரம் திமுக பரபர

image

சர்ச்சை பேச்சுக்காக கட்சிப் பதவியை இழந்த பொன்முடி, தற்போது அமைச்சரவையில் இருந்தும் விலகியிருப்பது, அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து அவர் பதவிகளை இழந்திருப்பது, விழுப்புரம் மாவட்ட திமுகவில் அவருடைய எதிர்த்தரப்பான செஞ்சி மஸ்தான், லட்சுமணன் கோஷ்டியினரின் கையை ஓங்கச் செய்துள்ளது. மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டதில் இருந்தே பொன்முடி அதிருப்தியில் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!