News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News April 28, 2025

வேலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் கலெக்டர் உத்தரவு

image

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வருகிற மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

News April 28, 2025

வேலூர் மாவட்டத்தில் எந்த பதவியில் யார்?

image

▶️வேலூர் மாவட்ட ஆட்சியர்-சுப்புலெட்சுமி (0416-2252345)

▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- மதிவாணன் (0416-2256802)

▶️மாவட்ட வருவாய் அலுவலர்- மாலதி (0416-2253502)

▶️இணை இயக்குனர் /திட்ட அலுவலர், ஊரகவளர்ச்சி முகமை- செந்தில் குமரன் (0416-2253177)

▶️மாநகராட்சி ஆணையர்-.ஜானகி இரவீந்திரன் (0416-2220578)

▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)- முத்தையன் ( 0416-2253034)

ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்

News April 28, 2025

தமிழ் தெரிந்தால் போதும்; அரசு வேலை

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் உள்ள அலுவலங்களில் கிளீனர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5ஆம் வகுப்பு தேர்ச்சி (ம) தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 01.01.2025 அன்றுள்ளபடி 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட <>விண்ணப்பங்களை<<>> மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் நாளை மாலை 5.45 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!