News April 27, 2025
BREAKING: கோவை மேயர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை மேயர் ரங்கநாயகி தங்கி இருக்கும் அரசு பங்களாவில் நேற்று வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த மாநகராட்சி தற்காலிக ஊழியர் ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி செய்து வருகின்றனர். விசாரணையில், குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு புரளி என தெரியவந்தது.
Similar News
News July 10, 2025
கோவையில் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை

கேரளாவின் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இரண்டு நிபா வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், கோவையில் அச்சப்பட வேண்டிய சூழல் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவையில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை, எனினும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்ள பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (09.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
கோவை: அவசர காலத்தில் உதவும் எண்கள்!

கோவை மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!