News April 27, 2025
வெடி விபத்தில் 4 பேர் பலி: ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கும் CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
Similar News
News January 12, 2026
வெளியூரில் இருந்தே பொங்கல் பரிசு ₹3,000 வாங்கலாம்

பொங்கல் பரிசு ₹3,000 மட்டுமல்ல தவிர்க்க முடியாத சூழலில் உங்களுடைய ரேஷன் பொருள்களை கூட நீங்கள் நியமிக்கும் ஒருவர், வாங்க முடியும். அதற்கான வழிமுறைகள் TNPDS-ல் உள்ளன. அதற்கு ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்ட உங்களது செல்போன் எண், நியமிக்கும் நபரின் ஆதார் அவசியம். <
News January 12, 2026
ஒரே மேட்ச்.. 5 மெகா ரெக்கார்டுகள்!

களமிறங்கும் ஒவ்வொரு மேட்ச்சிலும் ஏதோவொரு சாதனையை விராட் கோலி படைத்து கொண்டே இருக்கிறார். NZ-க்கு எதிரான முதல் ODI-ல் அவர் 93 ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு வருத்தமளித்தாலும், அந்த போட்டியில் மட்டும் அவர் 5 மெகா ரெக்கார்டுகளை படைத்துள்ளார். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும்.
News January 12, 2026
CM ஸ்டாலினை காப்பது துர்காவின் பக்தி: HM

திருப்பரங்குன்றம், குமரன் குன்று கோயில் விவகாரங்களை சுட்டிக்காட்டிய இந்து முன்னனி (HM) மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், முருகன் CM ஸ்டாலினுக்கு தக்க பாடம் புகட்டுவார் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் CM-ன் கார் டயர் வெடித்தது, இருக்கையில் பாம்பு இருந்ததாக வெளியான தகவல் அனைத்தும் எச்சரிக்கை மணி என்று கூறிய அவர், மனைவி துர்காவின் பக்தி தான் CM ஸ்டாலினை பாதுகாத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


