News April 27, 2025
இந்தியா – பாக். வர்த்தகம் : கோவைக்கு பாதிப்பா?

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாக். மீது பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதனால், கோவை, திருப்பூரில் தொழில்கள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஆயத்த ஆடை தயாரிப்பில் பாக். நமக்கு போட்டி நாடே தவிர, இதனால் பாதிப்பில்லை என வர்த்தகர்கள் கூறியுள்ளனர். மேலும், இதனால் எல்லைப் பகுதியில் மட்டுமே பிரச்னை என்றும், உக்ரைன், ரஷ்யா போரிலும் நமக்கு பின்னடைவும் இல்லை என்றனர்.
Similar News
News September 13, 2025
செங்கோட்டையனுடன் இணைந்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தனது ஆதாரவாளர்களுடன் செங்கோட்டையனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். அதிமுகவில் ஒற்றுமை இல்லாததால், கூட்டணிக்கு தேடி வருபவர்கள் கூட, தற்போது வரவில்லை என்றார். செங்கோட்டையன் விடுத்த 10 நாள்கள் கெடு முடிந்தபின் நல்ல செய்தி வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
News September 13, 2025
இசைஞானிக்கு பாராட்டு விழா தொடங்கியது

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சிம்பொனி நாயகன் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் CM ஸ்டாலின், DCM உதயநிதி, கமல், ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விழாவில் ஸ்டாலின் இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்க உள்ளார். 50 ஆண்டுகளாக இசைத்துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கிய இசைஞானியை தமிழர்கள் கொண்டாடும் நிகழ்ச்சியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 13, 2025
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

வருமான வரிச் சட்டத்தின் கீழ் வீட்டில் தங்கம் வைத்திருக்க வரம்புகள் உள்ளன. *திருமணமான பெண்கள்: 500 கிராம் வரை தங்க நகைகள் வைத்துக் கொள்ளலாம். *திருமணமாகாத பெண்கள்: 250 கிராம் வரை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆண்கள்: 100 கிராம் மட்டுமே வைத்திருக்கலாம். வரம்பை மீறினால் அதற்கான ஆவணங்களை வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படலாம். SHARE IT.