News April 27, 2025

நீட் தேர்வு மோசடி புகாரளிக்க இணையதளம் தொடக்கம்

image

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற மோசடி புகார்களை அளிக்க புதிய இணையதளங்களை தேசிய தேர்வு முகமை (NTA) தொடங்கியுள்ளது. NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வாயிலாக ஆதாரத்துடன் புகார்களை பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள NTA, ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News September 13, 2025

அதிமுக உடையாமல் பார்த்துக் கொள்ளுங்க EPS : கனிமொழி

image

கூட்டணி பற்றி பேசுவதற்கு முன்பு, EPS அவருடைய கட்சி உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி மறைமுகமாக சாடியுள்ளார். தற்போதைய சூழலில் கட்சியை பாதுகாப்பாதே அதிமுகவுக்கும், இபிஎஸ்-க்கும் நல்லது எனக் கூறிய அவர், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை விரைவில் தொடங்கவிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக திமுக கூட்டணியை EPS கடுமையாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News September 13, 2025

யார் யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்?

image

2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் (ITR) தாக்கல் செய்ய <<17699112>>இன்னும் 2 நாள்களே <<>>உள்ளன. இந்நிலையில், ₹12 லட்சம் வரை வருமானம் இருந்தால், வரி செலுத்த தேவையில்லை என்ற தவறான தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால், 2025-26 நிதியாண்டு முதல் மட்டுமே இது பொருந்தும். இப்போதைக்கு ₹7 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் வரி செலுத்துவது அவசியம். அதேசமயம், 3 லட்சத்தை தாண்டினால் ITR தாக்கல் செய்வது கட்டாயம்.

News September 13, 2025

நடிகருக்கு கூட்டம் கூடுவதில் ஆச்சரியமில்லை: தமிழிசை

image

திருச்சியில் தனது முதல் பயணத்தை தொடங்கி விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள் குவித்தனர். இந்நிலையில், விஜய்க்கு பெரியளவில் கூட்டம் கூடியது உண்மைதான் என கூறிய தமிழிசை, நடிகருக்கு கூட்டம் வருவதில் ஆச்சரியம் இல்லை என தெரிவித்தார். மேலும் தி.மு.க. அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் விஜய் தீவிரமாக பரப்ப வேண்டும் என்றும், அதுதான் தமிழக மக்களுக்கு அவர் செய்யும் தொண்டு எனவும் கூறினார்.

error: Content is protected !!