News April 27, 2025

உங்களுக்கு தெரியுமா ? தர்மபுரி அரசு நிறுவனங்களின் எண்கள்

image

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி- 04342-233177,அரசு மருத்துவக் கல்லூரி – 04342-233 600, அரசு சட்டக் கல்லூரி – 04348-291292, அரசு பெண்கள் கலைக் கல்லூரி – 04348-241399, அரசு பொறியியல் கல்லூரி – 04342-290090, அரசு ஐடிஐ கல்லூரி – 043482 35323, கூட்டுறவு சர்க்கரை ஆலை பல்தொழில்நுட்ப கல்லூரி-9442222102, *அட்மிஷனுக்காக +2 மாணவர்களுக்கு பகிரவும். ஷேர் பண்ணுங்க..

Similar News

News November 5, 2025

ஒகேனக்கல் பரிசல் துறை ரூ.1.91 கோடிக்கு ஏலம்!

image

ஒகேனக்கல், தருமபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான பரிசல் துறை ஏலம் நேற்று (நவ.04) பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஏலத்திற்கு பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் சத்திவேல், லோகநாதன் தலைமை வகித்தனர். கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி-யுடன் ரூ.1.73 கோடிக்கு போன நிலையில், இந்தாண்டு ஜி.எஸ்.டி-யுடன் ரூ.1.91 கோடிக்கு ஏலம் போனது. பின் பொச்சாரம்பட்டியை சேர்ந்த மாயக்கண்ணன் ஏலம் எடுத்தார்.

News November 5, 2025

தருமபுரி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News November 5, 2025

தருமபுரி: மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

image

தருமபுர, மேட்டூரை சேர்ந்த கூலித் தொழிலாளர் ஜீவா, தடங்கம் மேம்பாலம் அருகே சாலையோரம் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிகளை கழட்டிகொண்டிருந்த போது சாலையோர மின்கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (நவ.03) உயிரிழந்தார். இதுகுறித்து அதியமான்கோட்டை காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!