News April 27, 2025
ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 அல்லது மகளிர் உதவி எண் 181 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News August 25, 2025
வேளாண் சுயதொழில் தொடங்க வாய்ப்பு

புதுச்சேரி அரசு வேளாண் & விவசாயிகள் நலத்துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் சார்பில், வேலையில்லா விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள், வேளாண் சுயதொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் துவங்க, விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
News August 25, 2025
புதுச்சேரி: காவல்துறையில் வேலைவாய்ப்பு

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 உதவி காவல் ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற செப்டம்பர் 12ம் தேதிக்குள் <
News August 25, 2025
புதுவை: விநாயகர் சிலை குறித்து கட்டுபாடுகள் விதிப்பு

விநாயகர் சிலை செய்பவர்கள் நகராட்சியிடம் அனுமதி பெற்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி சுற்றுச் சூழலுக்கு ஏற்ற இயற்கையான மூலப்பொருட்களை பயன்படுத்தி சிலை உற்பத்தி செய்ய வேண்டும் என புதுவை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழா நடத்த நகராட்சி, காவல் துறையிடம் அனுமதி பெறுமாறு கூறியுள்ளார்.