News April 27, 2025
மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Customer Care Executive பதவிக்கு 50 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இங்கே<
Similar News
News December 24, 2025
மயிலாடுதுறை: பெண் மீது தாக்குதல் – 2 பேர் கைது

மயிலாடுதுறையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி மகாலட்சுமி(60). இவரிடம் மயிலாடுதுறையை சேர்ந்த ஜியாவுதீன், ராமலிங்கம் ஆகியோர் ஆடு வாங்கியது தொடர்பாக ரூ.1.80 லட்சம் பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில், பாக்கி பணத்தை கேட்டபோது இருவரும் மகாலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
News December 24, 2025
மயிலாடுதுறை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மயிலாடுதுறை மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 24, 2025
மயிலாடுதுறை: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற டிச.31ம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


