News April 27, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.27) மதியம் 1 மணி வரை மழை நீடிக்கவுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News April 28, 2025

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு

image

முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆர்.எஸ் இராஜகண்ணப்பனுக்கு நேற்று (ஏப்.27) அமைச்சர் பொன்முடி வகித்து வந்த வனத்துறை மற்றும் காதி துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News April 27, 2025

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் ராமநாதபுரம் MP

image

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக இன்று கோயம்புத்தூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொது செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 27, 2025

உத்தரகோசமங்கை கோயிலில் மண்டல பூஜை

image

ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ஏப்ரல்.4ல் கும்பாபிஷேகம் நடந்தது. திருவிழா வருவதால் முன்கூட்டியே ஏப்.,30ல் மண்டல பூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏப்ரல்.29 மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை மண்டல பூஜையும் நடக்க உள்ளது. குழந்தை பாக்கியத்திற்கு பெயர் பெற்ற தலத்தின் பூஜையில் பலரும் கலந்து கொள்வார்கள் *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!