News April 5, 2024
IPL: பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரம்

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் வீரர் ஷஷாங் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். நேற்றைய போட்டியில், 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என விளாசி 61 ரன்கள் குவித்த அவர், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணியால் தவறுதலாக வாங்கப்பட்ட இவர், தற்போது அணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடி தந்துள்ளார். இதனால் பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.
Similar News
News January 21, 2026
இராமநாதபுரத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 77-வது குடியரசு தின விழா ஜன.15 அன்று கொண்டாடபட உள்ளது. இதையொட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தை தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் வந்து செல்வவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
News January 21, 2026
மோடி, கோலி இல்ல.. இவர்தான் நாட்டின் டாப் செலிபிரிட்டி!

ஜனவரி 1-15 காலகட்டத்தில் நாட்டின் பிரபலமான நபர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. சோஷியல் மீடியா டிரெண்ட், மக்கள்- மீடியாவின் கவனத்தில் தொடர்ந்து நீடிப்பது போன்ற தரவுகளின் கீழ் இந்த லிஸ்ட் தயாராகியுள்ளது. இந்த பட்டியலில் PM மோடி, விராட் கோலி ஆகியோரை முந்தி நடிகர் ஒருவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் என அறிய மேலே உள்ள படத்தை இடதுபக்கமாக Swipe பண்ணுங்க.
News January 21, 2026
வைத்திலிங்கம் விலகினார்.. OPS-க்கு பேரதிர்ச்சி

வைத்திலிங்கம் தனது MLA பதவியை ராஜினாமா செய்தார். அடுத்ததாக திமுக அலுவலகம் சென்று CM முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ள உள்ளார் என்கின்றனர். தஞ்சை ஒரத்தநாடு MLA-வாக இருக்கும் இவர், 2001-2006-ல் வனத்துறை & சுற்றுச்சூழல் அமைச்சர், 2011-2016-ல் நகர்புற வளர்ச்சி அமைச்சர், பிறகு MP-யாக இருந்தார். இந்நிலையில் அணிக்கு பலம் சேர்த்த ஒருவர் எடுத்துள்ள இம்முடிவு OPS-க்கு அதிர்ச்சியளித்துள்ளது.


