News April 27, 2025

வேலூர்: கஷ்டங்களை நீக்கும் கால பைரவர்

image

வேலூர் மாவட்டம் செங்காநத்தம் மலையில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 10 கைகளுடன் 3 1/2 அடி உயரத்தில் பைரவர் அருள்பாலிக்கிறார். மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் அஷ்டமி நாளில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் குழந்தை வரம் கிடைக்கும். மேலும், 108 ஒரு ரூபாய் நாணயத்தால் அபிஷேகம் செய்தால் பணக்கஷ்டம் மற்றும் இழந்த செல்வத்தை மீட்கலாம் என்பது ஐதீகம். கடனில் சிக்கியவர்களுக்கு பகிரவும்

Similar News

News August 26, 2025

வேலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து நடக்கிறது. வேலூர், காட்பாடி, அரக்கோணம், சூரியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடி கண்காணிப்பு செய்ய உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 25, 2025

வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்!

image

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News August 25, 2025

வேலூர் மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க.!

image

வேலூர் மக்களே.. சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் கண்டிப்பாக ஒரு முறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!