News April 27, 2025

ஜோடி பட பாணியில் திருமணம் நிறுத்தம்

image

‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே’ என்ற பாடலின் முடிவில், மணக்கோலத்தில் இருக்கும் சிம்ரன், தனது காதலன் பிரசாந்திடமே செல்வார். இதேபோன்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் Channa Mereya என்ற பிரபலமான பிரேக்அப் பாடலை DJ ஒலிபரப்பியுள்ளார். இதனைக் கேட்டதும் பழைய காதல் நினைவுக்கு வர, உடனே திருமணத்தை நிறுத்தியுள்ளார் மணமகன். காதலை சேர்த்து வைத்த DJ-க்கு நன்றி என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Similar News

News April 28, 2025

சிறுநீரை குடித்து காயத்தில் இருந்து மீண்ட நடிகர்!

image

தனது சொந்த சிறுநீரை குடித்து முழங்கால் காயத்தில் இருந்து குணமானதாக பாலிவுட் நடிகர் பாரேஷ் ராவல் தெரிவித்துள்ளார். பட ஷூட்டிங்கின் போது காலில் காயம் ஏற்பட்டதாகவும், அப்போது மறைந்த இயக்குநர் வீரு தேவ்கன் தன்னை சந்தித்து, தினமும் எழுந்ததும் சிறுநீரை குடிக்கச் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். 15 நாள்கள் தொடர்ந்து குடித்துவிட்டு, டாக்டரை பார்க்கச் சென்றபோது, அவரே ஆச்சரியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 28, 2025

பாஜகவிற்கு ஆதரவாக பேசிய சசிதரூர்.. காங். பதிலடி

image

J&K தீவிரவாத தாக்குதலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவதை நிறுத்திவிட்டு, தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என காங். எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் போரை முன்னுதாரணம் காட்டி, அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு குறைபாடு இருக்கத்தான் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பக்கா பாஜககாரர் போல அவர் பேசுவதாக காங். பதிலடி கொடுத்துள்ளது.

News April 28, 2025

நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

image

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதை வைத்து மதிப்பிடுங்கள். *இந்த உலகை மாற்றுவதற்கான மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. *பின்னால் இருந்து வழிநடத்துங்கள் – மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.

error: Content is protected !!