News April 27, 2025
மருத்துவ கழிவுகள் விவகாரம்.. அரசு முக்கிய முடிவு

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால், விசாரணையின்றி நேரடி சிறை தண்டனை வழங்கும் வகையில், சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மசோதாவை அறிமுகம் செய்தார். வரும் 29-ம் தேதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Similar News
News April 28, 2025
பிரபல நடிகை பியான்கா காஸ்ட்ரோ காலமானர்

‘RuPaul’s Drag Race’ நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற பிரபல நடிகை பியான்கா காஸ்ட்ரோ(44) காலமானார். பிலிப்பைன்ஸில் பிறந்த பியான்கா, தனது 10 வயதில் தாய், சகோதரருடன் அமெரிக்காவின் குயின்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். பின்னர் பெரும் சிரமத்திற்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்ற அவர் அண்மையில் ஏற்பட்ட தொற்று காரணமாக காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், திடீரென உயிரிழந்தார். #RIP
News April 28, 2025
திருநங்கைகளுக்கு எந்த டாய்லெட்?

பிறப்பில் அறியப்படும் பாலினமே உண்மையான பாலினம் என்று UK நாட்டின் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. இதனால், திருநங்கையர்கள் மற்றும் திருநர்கள் எந்த கழிவறையை பயன்படுத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் ஆண், பெண் என இரண்டு டாய்லெட்டிலும் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தீர்ப்புக்கு முன் திருநங்கையர்கள் பெண்களுக்கான டாய்லெட்டை பயன்படுத்தி வந்தனர்.
News April 28, 2025
சிரஞ்சீவி-நயன்தாரா கூட்டணி.. ஹாட்ரிக் அடிக்குமா?

பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கும் படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. வெங்கடேஷ் நடிப்பில் வெளியான சங்கராந்தி வஸ்துனம் மிகப்பெரும் வெற்றிபெற்ற நிலையில், தனது அடுத்த படத்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து அனில் ரவிபுடி இயக்குகிறார். முன்னதாக, சைரா நரசிம்ம ரெட்டி, காட்பாதர் ஆகிய படங்களில் சிரஞ்சீவி உடன் நயன்தாரா சேர்ந்து நடித்துள்ளார்.