News April 27, 2025

ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

image

துறையூர் அருகே பெருமாள்பாளையத்தைச் சேர்ந்த பாலகுமார் மகன் தர்ஷன் (13). நேற்று பெற்றோருடன் ஸ்ரீரங்கம் தேரோட்டத்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பியபோது, நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க தர்ஷன் இறங்கியுள்ளார். அப்போது மூழ்கத் தொடங்கிய அவரை மீட்டு ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

Similar News

News September 16, 2025

திருச்சி: ஒரே நாளில் 12 பேர் மீது குண்டாஸ்

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் பரிந்துரையின் பேரில், திருச்சி மாவட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் சுமார் 12 நபர்கள் மீது நேற்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News September 16, 2025

திருச்சி: ரயில் சேவையில் மாற்றம்

image

சென்னை எழும்பூர் யார்டு பகுதியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில் வரும் செப்.21, 28 மற்றும் அக்.5, 12, 19, 26 மற்றும் நவ.2, 9 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து புறப்பட்டு வழக்கமான வழித்தடமான எழும்பூர் வழியை தவிர்த்து, வேலூர், காட்பாடி, திருத்தணி, வழியாக அகமதாபாத் செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. LIKE & SHARE..

News September 16, 2025

திருச்சி: கஞ்சா விற்றவர்கள் அதிரடி கைது

image

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மெய்யப்பன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .இதேபோல துவரங்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அழகேஸ்வரன், சுபாஷ், கரன், நவநீதகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என திருச்சி மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!