News April 27, 2025

திண்டுக்கல்லில் குற்றவாளிகளை கண்டறியும் App!

image

திண்டுக்கல்: பழனி பகுதியில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க புதிய செயலி குறித்த ஆலோசனை காவல்துறையால் வழங்கப்பட்டது. இந்தச் செயலியில் விடுதியில் தங்க வருபவர்கள் தங்கலீன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும், இளம் பெண்களுடன் வருபவர்கள், மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு அறைகள் தரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Similar News

News July 6, 2025

திண்டுக்கல்லில் கட்டணமில்லா இ சேவை மையம் முகாம்

image

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி ஆலய வளாகத்தில் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உடல் உழைப்பு கூலி கட்டுமான அனைத்து பொது தொழிலாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் கட்டணமில்லா இணைய சேவைகள் முகாம் 08.07.2025 செவ்வாய்கிழமை காலை 08.00 மணி முதல் மாலை 05.00 வரை நடைபெற உள்ளது.

News July 6, 2025

டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

image

திண்டுக்கல்: வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 ப்ரோபேஷனரி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் <<-1>>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ. 48,480/- முதல் ரூ. 85,920/- வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு திண்டுக்கல் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நடைபெறும். ஷேர் செய்யுங்கள்!

News July 6, 2025

பாலத்தில் கார்கள் மோதி விபத்து: 7 பேர் படுகாயம்

image

காரைக்குடியை சேர்ந்தவர் ஸ்டாலின் (29). இவர் தனது நண்பர்கள் 7 பேருடன் நேற்று காரில் கொடைக்கானல் சென்று கொண்டிருந்தார். நத்தம் அருகே அப்பாஸ்புரம் பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார்கள் சாலையோரத்தில் இருந்த பாலத்தில் அடுத்தடுத்து மோதி நின்றது. இதில் காரில் வந்த 7 பேரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை.

error: Content is protected !!