News April 27, 2025
170 சீட் உறுதி.. வியூகம் வகுக்கும் இபிஎஸ்!

2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் இபிஎஸ் தெளிவாக உள்ளார். எனவே, 170-க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும் என அவர் நினைக்கிறார். அதனால் தான், ADMK 150, BJP 40, பிற கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் என்ற பாஜகவின் கணக்கிற்கு அவர் உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த முறை ஆட்சியை பிடிப்பதில் அவர் உறுதியாக உள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
Similar News
News September 13, 2025
திருச்சியில் முதல் பரப்புரை ஏன்… விஜய் விளக்கம்

போருக்கு முன்னர் குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்வதைபோல் 2026 தேர்தலுக்கான முதல் களமாக திருச்சியை தேர்வு செய்துள்ளதாக விஜய் கூறியுள்ளார். அரசியலில் பல்வேறு திருப்பங்களை திருச்சி நகரம் கொடுத்துள்ளதாக கூறிய அவர், அறிஞர் அண்ணா தேர்தலில் போட்டியிட விரும்பிய இடம், MGR மாநாடு நடத்திய இடம், பெரியார் வாழ்ந்த இடம் என எப்போதும், திருச்சிக்கு அரசியல் திருப்புமுனை வரலாறு இருப்பதாக கூறினார்.
News September 13, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், தமிழகத்தில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் கனமழை வெளுத்து வாங்குமாம். மேலும், 18-ம் தேதி வரை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கவனமாக இருங்கள்!
News September 13, 2025
இளைஞர்களுக்கு வருகிறது புதிய வேலைவாய்ப்புகள்

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த சர்வதேச தமிழ் பொறியாளர் மன்ற மாநாட்டில் DCM உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதில், தமிழ்நாடு அரசுக்கும் வெளிநாடுகளில் உள்ள அரசு & தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக DCM தெரிவித்துள்ளார். மேலும், பொறியாளர்களை, தொழில்முனைவோர்களாக உயர்த்தும் வகையில் திமுக அரசு செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.