News April 27, 2025
₹1,000 கோடியை கொட்டினாலும் அது ஈசி இல்லை: நானி

₹1,000 கோடி போட்டு படம் பண்ணினாலும், ‘மெய்யழகன்’ படத்தில் இருந்த அந்த உணர்வை திரையில் கடத்துவது அவ்வளவு எளிதல்ல என நடிகர் நானி தெரிவித்துள்ளார். இந்த படத்தை பார்த்ததும் ஆடிப்போய் விட்டதாகவும், நடிகர் கார்த்தியிடம் நிறைய பேசியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இயக்குநர் பிரேம் குமாரின் இந்த படைப்பு காலத்திற்கும் நிலைத்து நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 24, 2026
ஏப்ரலில் சொத்து வாங்க போறீங்களா?

வரும் ஏப்.1-ம் தேதி முதல் ₹2 லட்சத்திற்கும் மேல் முத்திரைத்தாள் வாங்க PAN எண் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ₹1 லட்சத்திற்கு மேல் முத்திரைத்தாள் வாங்குவோரின் விவரங்களை ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் நிறுவனம் பதிவு செய்வது அவசியமாகிறது. உயர்மதிப்புள்ள முத்திரைத்தாள் வாங்குவோர் அனைவரின் விபரங்களும் இனி வருமான வரித்துறைக்கு நேரடியாக செல்லும் வகையில் இத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
News March 24, 2026
விஜய்யை பார்க்க சென்ற இளைஞர் பலி

தஞ்சையில் விஜய் சென்ற காரை வேகமாக பின்தொடர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஹாஸ்பிடலில் கடந்த 3 வாரமாக தீவிர சிகிச்சையில் இருந்த அவர், இன்று பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷின் இழப்பை தாங்க முடியாமல் அவரது தந்தை அழுத காட்சி, நம் நெஞ்சை உலுக்குகிறது. இவரது குடும்பத்திற்கு தவெக சார்பில் நிதியுதவி அளிக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 24, 2026
‘துரந்தர் 2’ வேற லெவல்: ரஜினி

‘துரந்தர் 2’ படத்தை ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். தனது X பதிவில் அவர் ரன்வீர் சிங், இயக்குநர் ஆதித்ய தார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். 4 நாள்களில் அப்படம் ₹700+ வசூலித்திருக்கும் நிலையில், ஆதித்ய தாரை வசூல் மன்னன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீங்க ‘துரந்தர் 2’ பாத்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?


