News April 27, 2025
இளம்பெண் பலமுறை பலாத்காரம்

மகாராஷ்டிராவில் 24 வயதான இளம்பெண் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அப்பெண் அளித்த புகாரில், ஆக.10 – ஏப்.23-க்குள் ஐ.டி. ஊழியர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோ, போட்டோ எடுத்து ₹2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது அந்தரங்க போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அப்பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Similar News
News April 27, 2025
விஜய்யுடன் கைகோர்க்கிறதா பாமக? புது ரூட்டில் ராமதாஸ்

தவெக உடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA-ல் பாமக அங்கம் வகிக்கும் நிலையில், ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், 2026 தேர்தலில் விஜய் உடன் கைகோர்க்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், NDA-ல் தனது பேர வலிமையை கூட்டுவதற்காக, பாமக கையிலெடுத்த அஸ்திரமே விஜய் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை என்கிறார்கள் விமர்சகர்கள்.
News April 27, 2025
பாக்.க்கு ஆதரவாக குதிக்கிறதா சீனா? Ex ஜெனரல் புது தகவல்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா
-பாக். இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. ஒருவேளை பாக்.க்கு ஆதரவாக சீனா களமிறங்கினால், அது 3-வது உலகப் போரின் தொடக்கமாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்நிலையில், இந்தியா-பாக். இடையே போர் மூண்டால், சீனா தலையிடாது என Ex ஜெனரல் ராணா பிரதாப் கலிதா தெரிவித்துள்ளார். USA-வின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதால், இதில் கவனம் செலுத்தாது என்றார்.
News April 27, 2025
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணி குடிக்குறீங்களா?

பிளாஸ்டிக் நம் வாழ்வின் அன்றாட பகுதியாகிவிட்டது. ஆனால், பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால், மாரடைப்பு வரும் அபாயம் இருக்கிறது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் போது, அதிலிருக்கும் நுண்ணிய பிளாஸ்டிக்கான Bisphenol A, Phthalates ரசாயனங்கள் உடலில் நுழைகின்றன. இதனால், ரத்த அழுத்தம் அதிகரிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படலாம். இனி கொஞ்சம் கவனமாக இருங்க!