News April 27, 2025
Live செய்வதை தவிருங்கள்.. ஊடகங்களுக்கு அரசு அட்வைஸ்

நாட்டின் நலனுக்காக, அனைத்து ஊடகங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான செய்தியை வெளியிடும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பு படைகளின் நடமாட்டத்தை நேரலை செய்வதை தவிர்க்குமாறும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 4, 2025
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும்

அதிகாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
News November 4, 2025
கோவை கொடூரத்திற்கு போதை கலாசாரமே காரணம்: வைகோ

கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த சம்பவம் ஒரு கொடூர நிகழ்வு என வைகோ தெரிவித்துள்ளார். தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்தும் இத்தகைய குற்றங்களுக்கு மதுப்பழக்கமும், போதை கலாசாரமுமே அடிப்படையாக இருக்கின்றன என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவருக்கும் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 4, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 4, ஐப்பசி 18 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 PM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை


