News April 26, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்ரல்.26) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 26, 2025
நெல்லை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

நெல்லை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0462-2573017, தொழிலாளர் துணை ஆணையர் – 0462-2573017 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க.
News December 26, 2025
நெல்லை: வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி!

பாவூர்சத்திரம் மைக்கேல் ராஜ் (38) தூத்துக்குடியில் இருந்து டூவீலரில் வந்த போது கேடிசி நகர் அருகே பேரி கார்டு மீது மோதி விபத்தில் சிக்கினார். பாளை GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இட்டேரி பகுதியை சேர்ந்த முருகன் (34) டூவீலரில் மேலப்பளையம் அருகே வாகன விபத்தில் சிக்கி, உயிரிழந்தார். அதேபோல் பாளை பகுதியை சேர்ந்த நோவா (30) டூவீலரில் இருந்து தவிறி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News December 26, 2025
நெல்லையில் மீண்டும் ஹெலிகாப்டர் சவாரி வாய்ப்பு

நெல்லை மாநகரை ஆகாயத்தில் பறந்து சுற்றி பார்க்கும் ஹெலிகாப்டர் சவாரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பயணித்து அனுபவித்து மகிழ்ந்தனர். இந்த ஹெலிகாப்டர் சவாரி மீண்டும் நெல்லை மக்களை மகிழ்விக்க வருகிறது. தைப்பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை 5 நாட்கள் நெல்லை மாநகரில் ஹெலிகாப்டர் சவாரி நிகழ்ச்சி அதிகாரிகள் அனுமதியுடன் நடைபெற உள்ளது.


