News April 26, 2025
மழையால் IPL போட்டி பாதிப்பு

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் PBKS vs KKR ஐபிஎல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த PBKS அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை துரத்த களமிறங்கிய KKR அணி, ஒரு ஓவருக்கு விக்கெட்டுகள் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், மைதானம் முழுவதும் மூடப்பட்டது.
Similar News
News April 27, 2025
மீண்டும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பாகிஸ்தான்!

கடந்த 2 நாள்களாக Loc-யில் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது. நேற்றும் நள்ளிரவில், டுட்மரி கலி (tutmari gali) மற்றும் ராம்பூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டை இந்திய ராணுவம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாகவும்.
News April 27, 2025
வெடி விபத்தில் 4 பேர் பலி: ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கும் CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
News April 27, 2025
இந்தியா – பாக். வர்த்தகம் : கோவைக்கு பாதிப்பா?

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாக். மீது பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதனால், கோவை, திருப்பூரில் தொழில்கள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஆயத்த ஆடை தயாரிப்பில் பாக். நமக்கு போட்டி நாடே தவிர, இதனால் பாதிப்பில்லை என வர்த்தகர்கள் கூறியுள்ளனர். மேலும், இதனால் எல்லைப் பகுதியில் மட்டுமே பிரச்னை என்றும், உக்ரைன், ரஷ்யா போரிலும் நமக்கு பின்னடைவும் இல்லை என்றனர்.