News April 26, 2025
சேலத்தில் இன்று 102.4 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு!

சேலம் மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து வெயில் சதமடித்து வருகிறது. சுட்டெரித்து வரும் வெயிலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தர்பூசணி, நீர்மோர், பழச்சாறு போன்றவற்றை பருகி உடல் சூட்டைத் தணித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.26) 102.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது
Similar News
News September 15, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<
News September 15, 2025
சேலம் மாநகர காவல்துறை எச்சரிக்கை!

சேலம் சிட்டி போலீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் ஆப்ஸ் மூலம் வரும் APK கோப்புகளை பதிவிறக்க வேண்டாம், என அறிவுறுத்தியுள்ளது. அவை மால்வேர் கொண்டு உங்கள் கைபேசியை பாதித்து தனிப்பட்ட தகவல்களை திருடும் அபாயம் உள்ளது. நம்பகமான மூலங்களில் இருந்து மட்டுமே ஆப்ஸ் பதிவிறக்கவும். புகார் பதிவு செய்ய www.cybercrime.gov.in பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
News September 15, 2025
சேலம்: பயன்பாட்டிற்கு வரும் தாழ்தளப் பேருந்துகள்?

சேலம் கோட்டத்திற்கு முதற்கட்டமாக 16 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள இப்பேருந்து சேவைகளின் துவக்க விழா அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் எண்-1 பேருந்து சேலம் மாநகரத்தில் பயணிக்க உள்ளது. குறிப்பாக புதிய பேருந்து நிலையம் முதல் அயோத்தியாபட்டணம் வரை இயக்கப்படும், இப்பேருந்து 3 பைபாஸ் வழியாக இயக்கப்படும்.