News April 26, 2025
நெல்லை: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்கிறார்கள். எனவே, எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொண்டு குறைகளை புகார் அளிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தெரிவித்துள்ளார்.
Similar News
News April 27, 2025
நெல்லை மாவட்ட வட்டாட்சியர்கள் எண்கள்

சான்றிதழ்கள், நில ஆவணங்கள், வரி வசூலிப்பு, விசாரணை போன்றவைகளை வட்டாட்சியர் ஆய்வு செய்வார்
திசையன்விளை -9384094224
சேரன்மகாதேவி -9384094223
மானூா் -9384094222
இராதாபுரம் -9445000674
நாங்குநோி -9445000673
அம்பாசமுத்திரம் -9445000672
பாளையங்கோட்டை -9445000669
திருநெல்வேலி -9445000671
*ஷேர் பண்ணுங்க
News April 27, 2025
நெல்லையில் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்ட சாலை

நெல்லை சந்திப்பிலிருந்து சமாதானபுரம் வழியாக கேடிசி நகர் செல்ல இன்று முதல் முடியாது. சமாதானபுரத்திலிருந்து கோர்ட் வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சமாதானபுரத்திலிருந்து எஸ்.பி அலுவலகம் வழியாக கேடிசி நகர் செல்லலாம். கேடிசி நகரில் இருந்து சமாதானம் வருவதற்கு எந்த தடைகளும் கிடையாது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். *ஷேர் பண்ணுங்க
News April 26, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்ரல்.26) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.