News April 26, 2025
சொந்த அரசையே கேலி செய்யும் பாகிஸ்தானியர்

பஹல்காம் தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், தங்கள் அரசை ட்ரோல் செய்து பாகிஸ்தானியர்கள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். பாக்., போர் விமானம் போன்ற செட்டிங்குடன் பைக் ஓட்டும் ஒருவரின் போட்டோவை பகிர்ந்து, ‘இந்திய விமானப்படையுடன் சண்டை போடுவதானால் காலை 9 மணிக்குள் செய்யுங்கள், 9:15-க்கு பின் பெட்ரோல் சப்ளை கிடைக்காது’ என்று நாட்டு நிலையை கிண்டலடிக்கின்றனர்.
Similar News
News August 24, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் ஒருநாள் விடுமுறை

கடந்த 2 நாள்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, அடுத்த 2 நாள் கழித்து மீண்டும் விடுமுறை வருகிறது. ஆம், நாளை, நாளை மறுநாள் என 2 நாள்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். புதன்கிழமை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று அரசு விடுமுறையாகும். 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறையாகும்.
News August 24, 2025
CM ஸ்டாலினுடன் சுதர்சன் ரெட்டி சந்திப்பு

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னையில் CM ஸ்டாலினை சந்தித்தார். அப்போது திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார். நிகழ்வில் பேசிய சுதர்சன் ரெட்டி, பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் CM ஸ்டாலின் தமிழகத்தை சிறப்பாக வழிநடத்துவதாகவும் கல்வி, சுகாதார கட்டமைப்பில் நாட்டை வழிநடத்தும் அளவிற்கு தமிழகம் உயர்ந்திருப்பதாகவும் புகழ்ந்தார்.
News August 24, 2025
SPACE: சூரியன் வெடிச்சிட்டா என்ன ஆகும் தெரியுமா?

திடீர்னு ஒருநாள் சூரியன் வெடிச்சிட்டா என்ன ஆகும்னு யோசிச்சிருக்கீங்களா? அப்படி நடந்தா அது பெரிய அழிவுகளுக்கு வழிவகுக்கும்னு வல்லுநர்கள் சொல்றாங்க ▶சூரியன் வெடிச்சதும் வெளியாகும் neutrino கதிர்வீச்சு உயிரினங்களை அழிச்சிடுமாம் ▶சூரியனோட Gravity இல்லாம, பூமி உள்பட எல்லா கோள்களும் தூக்கி வீசப்படும் ▶பூமியோட temperature -73°C வரை குறைந்து கடல்கள் உறையும்னு வல்லுநர்கள் சொல்றாங்க. SHARE.