News April 26, 2025
கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருஷம் ஜெயில்

கடன் வசூல் தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இதன்படி, தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கிய நிறுவனம் வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பிணையில் வரமுடியாத 3 ஆண்டு சிறைத்தண்டனையோ (அ) ₹5 லட்சம் அபராதமோ (அ) இரண்டுமே விதிக்கப்படலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News December 28, 2025
மார்கழி மாத கலர் கோலங்கள்!

வளைத்து, நெளித்து, சுழித்து போடப்படும் கோலங்கள் நம் வாழ்க்கை சுக, துக்க பின்னல்களால் நிறைந்தவை என்பதையும், சுழிகள் போல் துன்பம் வந்தாலும் துணிவுடன் இருக்கவேண்டும் என்ற தைரியத்தையும் உணர்த்துகின்றன. எனவே, மார்கழி மட்டுமல்ல வருடத்தின் 365 நாள்களும் கோலமிட தவறாதீர்கள். அந்த வகையில் சில ஸ்பெஷலான கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை வீட்டில் தவறாமல் முயற்சிக்கவும்.
News December 28, 2025
தலைமை செயலாளர்களுடன் PM மோடி ஆலோசனை

டெல்லியில், PM மோடி தலைமையில் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் மத்திய-மாநில அரசுகள் இடையிலான ஒத்துழைப்பு, பல்வேறு பிரச்னைகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான மனிதவளம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.
News December 28, 2025
தவெகவின் சின்னம்.. விரைவில் அறிவிக்கிறார் விஜய்

சேலத்தில் நடக்கவுள்ள விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெகவின் சின்னத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சின்னம் கோரி தவெக விண்ணப்பித்த நிலையில் விசில், மோதிரம், உலக உருண்டை உள்ளிட்ட சின்னங்களில் ஒன்றை EC ஒதுக்கிவிட்டதாக கூறப்படுகிறது. விஜய் அறிமுகப்படுத்தும் சின்னத்தை, 15 நிமிடங்களிலேயே உலகளவில் பிரபலப்படுத்த TVK நிர்வாகிகள் ஏற்பாடு செய்வதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


