News April 26, 2025

விழுப்புரத்தில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் நகரத்தில் அமைந்துள்ள VRP மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற மே.10ம் தேதி மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு கலந்துகொள்ள உள்ளனர். இந்த முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 22, 2025

விழுப்புரம்: இந்த முக்கியமான சான்றிதழ் பத்தி தெரியுமா….?

image

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தொலைந்து இருந்தால் மீண்டும் பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 22, 2025

விழுப்புரம்: பங்காளி சண்டை நீக்கும் கோயில்

image

விழுப்புரம் செஞ்சி சாலையில் உள்ளது திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக உள்ள சிவனை வழிபட்டால் அண்ணன் தம்பி இடையே உள்ள சொத்து பிரச்சனைகள் நீங்கும் என்பது நபிக்கையாக உள்ளது. சொத்து விவகாரத்தில் பொய் சத்தியம் செய்த அண்ணனை இங்குள்ள இறைவன் தண்டித்த காரணத்தால் இந்த நம்பிக்கை உள்ளது. மேலும் குழந்தை வரம் கிடைப்பது ஐதீகமாக இருக்கிறது. இதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

News September 22, 2025

விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
1.கனகஜோதி மஹால், விழுப்புரம் 2.சிவா மஹால், சூரப்பட்டு 3.வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், வல்லம் 4.பிபிஎஸ் மஹால், டி.பரங்கனி 5.ஊராட்சி மன்ற கட்டிட வளாகம், பெலாகுப்பம் 6.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், வேங்கை
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

error: Content is protected !!