News April 26, 2025
குழந்தை திருமணங்கள் தடுத்த நிறுத்தம் – கலெக்டர் பெருமிதம்

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த மார்ச் மாதம் குழந்தை திருமணம் குறித்து 28 புகார்கள் வந்ததாகவும், விசாரணையில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவை தவறான புகார் என்றும் தெரிவித்தார்
Similar News
News November 14, 2025
இலவசம்..அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்ட கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வருகின்ற நவ.19ஆம் முதல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி II & IIA – முதன்மைத் (Mains) தேர்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான தொகுதி II & IIA முதல்நிலை (Preliminary) தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் பிருந்தா தேவி அழைப்பு விடுத்துள்ளார்.
News November 14, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 13, 2025
15ஆம் தேதி முதல் புதிய ரயில் பெட்டிகள் அறிமுகம்!

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து தினந்தோறும், சேலம், சென்னை, எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் இதுவரை சாதாரண பெட்டிகள் பயன்படுத்தி வந்த நிலையில், வரும் 15ஆம் தேதி முதல் அதிநவீன எல்ஹச்பி எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அதிர்வை குறைத்து, பாதுகாப்பு வசதியுடன் கூடிய பெட்டிகள் இயக்கப்பட உள்ளதாக, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


