News April 26, 2025

என்எல்சியை மூட வேண்டும்: அன்புமணி அறிக்கை

image

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பைவிட115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே என்.எல்.சியை உடனடியாக மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News July 9, 2025

ரயில்வேயின் குற்றச்சாட்டு குறித்து ஆய்வுக்குபின் பதில் – ஆட்சியர்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தை தடுக்க ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கு கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அளித்த பதிலில் “தெற்கு ரயில்வேயின் குற்றச்சாட்டு குறித்து உரிய ஆய்வுக்குப் பின் பதில் அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

News July 9, 2025

கடலூர்: கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடலூர் ரயில் விபத்து குறித்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் உட்பட 13 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு படை (RPF) சம்மன் அனுப்பியுள்ளது. 13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

News July 9, 2025

கடலூர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஸ்வேஷ்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவர் விஸ்வேஷ் வீடு திரும்பினார். ரயில் விபத்தில் அவரது சகோதரர் நிமலேஷ் உயிரிழந்த நிலையில், இன்று அவர் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

error: Content is protected !!