News April 26, 2025
பாகிஸ்தானியர்கள் விசா காலக்கெடு

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலக்கெடு குறித்து முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது. SAARC விசா உள்ளவர்கள் இன்று (ஏப்.26) நள்ளிரவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். வணிக, பத்திரிகையாளர், மாணவர் உள்ளிட்ட விசா உள்ளவர்கள் நாளைக்குள்ளும், மருத்துவ விசா உள்ளவர்கள் வருகிற 29-க்குள் வெளியேற வேண்டும். இனி எந்த புதிய விசாவும் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படாது.
Similar News
News April 27, 2025
ஆலப்புழா ஜிம்கானா இயக்குநர் கஞ்சா வழக்கில் கைது!

சமீபத்தில் ஹிட்டான ‘ஆலப்புழா ஜிம்கானா’, ‘தள்ளுமாலா’ படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளனர். கொச்சியில் நடைபெற்ற சோதனையில், 1.6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூவரும் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர். இது, மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே, நடிகர் ஷைன் டாமும் போதைபொருள் வழக்கில் சிக்கி இருக்கிறார்.
News April 27, 2025
பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இன்று வரை கெடு

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை இன்றைக்குள் வெளியேற்ற அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது. இதனை அனைத்து மாநில முதல்வர்களிடமும் உள்துறை அமைச்சர் அமித்ஷா போனில் வலியுறுத்தியுள்ளார்.
News April 27, 2025
வங்கதேச இடைக்கால அரசைக் கவிழ்க்க திட்டம்?

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்தி கைது செய்ய வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் 5 மூத்த தலைவர்கள், வங்கதேச சட்டம் ஒழுங்கு நிலையை வைத்து, யூனுஸின் இடைக்கால அரசைக் கவிழ்க்க லண்டனில் வைத்து திட்டம் தீட்டியுள்ளனர். இருப்பினும், மாணவர்கள் மத்தியில் ஹசீனாவுக்கு எதிர்ப்பே அதிகம் உள்ளது.