News April 26, 2025
தூத்துக்குடி: லேசான மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தூத்துக்குடி,குமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*
Similar News
News April 27, 2025
தூத்துக்குடி: முக்கிய அரசு அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

தூத்துக்குடி மாவட்ட முக்கிய அரசு அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️மாவட்ட ஆட்சியர் – 0461-2340601
▶️மாவட்ட வருவாய் அலுவலர் – 0461-2340400
▶️திட்ட அலுவலர் – 0461-2340575
▶️சார் ஆட்சியர், தூத்துக்குடி – 0461-2320400
▶️வருவாய் கோட்டாட்சியர், திருச்செந்தூர் – 04639-245165
▶️காவல் கண்காணிப்பாளர் – 0461-2340200
▶️துணை காவல் கண்காணிப்பாளர் – 0461-2340200
இது போன்ற முக்கிய தொடர்பு எண்களை ஷேர் செய்யவும்
News April 27, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

தென் வங்கக்கடலில் புதிய காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிவஞானபுரம் 29.2 மிமீ மழையும், சோழபுரம் 13.6 மிமீ மழையும், காடல்குடி 12.4 மிமீ மழையும் பதிவாகியுள்ளது, என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 26, 2025
தூத்துக்குடி அருகே புதிய காற்றழுத்த சுழற்சி

தமிழகத்தில் தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டி உள்ள தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய காற்றழுத்த சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று உங்கள் பகுதியில் மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள்.