News April 26, 2025
14 தீவிரவாதிகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 14 தீவிரவாதிகள் குறித்த தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. 20-40 வயதுடைய இவர்கள் பாகிஸ்தானின் நிதியுதவியுடன் J&K-ல் தங்கி, தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
Similar News
News April 27, 2025
US வரி விதிப்பு : முதல் நாடாக கையொப்பமிடும் இந்தியா

இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது 25% பரஸ்பர வரி விதிக்கும் டிரம்பின் அறிவிப்பு, 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பரஸ்பர வரி விதிப்புக்குப் பிறகு US உடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா உள்ளதாக US நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார். முதற்கட்ட ஒப்பந்தம் செப்டம்பரில் கையெழுத்திட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News April 27, 2025
புதுச்சேரி பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை

புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமா சங்கர். காமராஜ் நகரைச் சேர்ந்த இவர், சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் தனியார் ஹோட்டல் அருகே பைக்கில் சென்றபோது 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இக்கொலைச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
News April 27, 2025
இன்று பெண்கள் Tri-series: எங்கு, எப்போது பார்க்கலாம்?

இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் ODI Tri-Series இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு இந்தியா – இலங்கை அணிகளின் மேட்சை, FanCode app-ல் காணலாம். இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (C), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹார்லீன் தியோல், ஜெமிமா, ரிச்சா கோஷ், யஸ்திகா, தீப்தி ஷர்மா, அமன்ஜோட் கவுர், கஷ்வீ கவுதம், ஸ்னேஹ் ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசப்னிஸ், ஸ்ரீ சரணி, ஷுச்சி உபாத்யாய்.