News April 26, 2025
விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் விதை

வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் நெல் விதை தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிலோவிற்கு ரூ.20 மானியத்தில் ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர் வரை வழங்கப்பட உள்ளது. அதேபோல் விதை கிராமத் திட்டத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.20 வீதம் ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது என்று தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News April 27, 2025
தேனியில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் இல்லை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதார் பாலாஜி என்பவர் முதல்வர் தனிப்பிரிவுக்கு பள்ளிகளில் மாணாக்கர்களை சேர்ப்பதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, மாணாக்கர்களை பள்ளிகளில் சேர்க்கவும், பொது தேர்வு எழுதவும் ஆதார் கட்டாயம் இல்லை என்ற தகவலை புகார்தாரருக்கு தெரிவித்துள்ளார்.
News April 27, 2025
தேனியில் ஆட்டுக்கொல்லி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

தேனி மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஏற்படும் வியாதிகளில் பெருமளவில் ஆடுகளை தாக்கும் நோய் ஆட்டுக்கொல்லி நோய் என்று குறிப்பிடப்படுகிறது இதனால் தேனி மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார் இதனால் அந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் தகவல்
News April 27, 2025
தேனி மாவட்ட ஆணையாளர்களின் தொடர்பு எண்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆணையாளர்களின் தொடர்பு எண்கள்
▶️தேனி நகராட்சி ஆணையாளா் – 04546252470
▶️பொியகுளம் நகராட்சி ஆணையாளா் -04546231210
▶️போடிநாயக்கனூா் நகராட்சி ஆணையாளா் – 04546280228
▶️சின்னமனூா் நகராட்சி ஆணையாளா் – 04554247383
▶️கம்பம் நகராட்சி ஆணையாளா் – 04554271283
▶️கூடலூா் நகராட்சி ஆணையாளா் – 04554231236
இது போன்ற முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை ஷேர் செய்யவும்