News April 26, 2025
ராகு – கேது பெயர்ச்சி நிறைவு

வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி இன்று மாலை 4.28 மணிக்கு ராகு – கேது பெயர்ச்சி நடைபெற்றது. 18 மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெயரும் ராகு பகவான், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்திருப்பதாக திருநாகேஸ்வரம் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல, கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
Similar News
News January 11, 2026
பிக்பாஸ் சீசன் 9 வின்னர் இவர்தானா?

பிக்பாஸ் 9-ன் வின்னர் பெண் போட்டியாளராக தான் இருப்பார் என ஆரம்பம் முதலே சிலர் கூறிவந்தனர். ஆனால் கானா வினோத்துக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருந்ததால் அவரே டைட்டில் அடிப்பார் என நம்பப்பட்டது. இந்நிலையில், அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார். இதனையடுத்து டைட்டில் ரேஸில் இருந்த சாண்ட்ராவும் எவிக்ட் ஆனதால், திவ்யா கணேஷ்தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்கின்றனர். உங்கள் கருத்து?
News January 11, 2026
அவருக்கு பதில் இவர்.. BCCI அறிவிப்பு

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் இருந்து விலகிய ரிஷப் பண்டுக்கு பதிலாக மாற்று வீரரை BCCI அறிவித்துள்ளது. முதல் ODI இன்று நடைபெறவுள்ள நிலையில், பயிற்சியின்போது பண்டின் விலா பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
News January 11, 2026
விஜய்க்கு எல்லா ஏற்பாடுகளும் ரெடி: டெல்லி போலீஸ்

டெல்லியில் விஜய்க்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் என காவல்துறை அறிவித்துள்ளது. கரூரில் தனது பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கில் CBI <<18824937>>அலுவலகத்தில், விஜய் நாளை ஆஜராக<<>> உள்ளார். இதனிடையே, டெல்லி விமான நிலையம், அவர் தங்கும் ஹோட்டல், CBI அலுவலகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தவெக கடிதம் எழுதியிருந்தது. அதற்கு டெல்லி காவல்துறை பதில் கடிதம் அனுப்பியுள்ளது.


