News April 26, 2025
56 அடியாக குறைந்தது வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று (26-04-2025) காலை அணையில் நீர்மட்டம் 56 அடியாக குறைந்துள்ளது. மேலும் தற்போது உள்ள தண்ணீரை குடிநீருக்காக சேர்த்து வைக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
Similar News
News January 13, 2026
தேனி: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க
News January 13, 2026
தேனி: இனி Phone மூலம்.. ரேஷன் கார்டு APPLY..

தேனி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு க்ளிக் செய்து செயலியை பதிவிறக்கம் செய்து ஆதார் எண் மட்டும் பதிவு பண்ணா போதும்.. உங்க ரேஷன் கார்டு காண்பிக்கும். அதை பதிவிறக்கம் செய்யுங்க. இதுல நீங்க என்னென்ன பொருள் வாங்கி இருக்கீங்கன்னு பாத்துக்கலாம். கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் பண்ணிக்கலாம். SHARE பண்ணுங்க..!
News January 13, 2026
தேனி: 5 பவுன் கொள்ளை; இரவில் மர்மநபர்கள் கைவரிசை..

இராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவரது வீட்டின் அருகிலேயே இவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் அசந்து தூங்கிய நிலையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை திருடி சென்றனர். திருட்டு சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் நேற்று (ஜன.11) வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


