News April 26, 2025

மயிலாடுதுறை: மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் பலி

image

கருவாழக்கரை மேலையூர் உத்திராபதியார் ஆலய அமுதுபடையல் திருவிழாவிற்க்காக  அமைக்கப்பட்டிருந்த ஒலி ஒளியின் மின் கம்பியை சரியான முறையில் கட்டாததால் அறுந்து கீழே விழுந்ததில் அருகே விளையாடிக் கொண்டிருந்த மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை மகன் தமிழ்துரை (வயது15) மின்சாரம் தாக்கி நேற்று இரவு சம்பவ இடத்திலேயே பலியானார். சிறுவன் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News July 11, 2025

மயிலாடுதுறை: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

➡️மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 15,880 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!

News July 11, 2025

மயிலாடுதுறையில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் இன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலை தேடும் இளைஞர்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)

News July 11, 2025

மயிலாடுதுறை: நாளை உழவரை தேடி வேளாண் முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம் மயிலாடுதுறை வட்டாரத்தில் உள்ள குளிச்சார் மற்றும் சோழம்பேட்டை கிராமங்களில் நாளை 11.7.2025 நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என மயிலாடுதுறை வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!