News April 26, 2025
நயன்தாராவால் நெட்பிளிக்ஸ் தலையில் விழுந்த துண்டு?

நயன்தாரா, மாதவன், சித்தார்த் நடித்து நேரடி OTT ரிலீசாக நெட்பிளிக்ஸில் வெளிவந்த ‘டெஸ்ட்’ படம் பயங்கர நெகட்டிவ் ரிவ்யூவையே பெற்றது. இந்த படத்தை வாங்கி, வெளியிட்ட நெட்பிளிக்ஸ் தளம் தற்போது தலையில் துண்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்துள்ளது. ஆம், இந்த படத்தை ₹55 கோடிக்கு வாங்கி வெளியிட்ட நெட்பிளிக்ஸுக்கு ₹5 கோடி கூட திரும்ப கிடைக்கவில்லையாம். படம் பார்க்காமலா OTT தளங்களிலும் வாங்குறாங்க?
Similar News
News April 27, 2025
பாக். ராணுவத்திடம் சிக்கிய வீரரின் நிலை என்ன?

தவறுதலாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமாரை ஒப்படைக்க பாக். ராணுவம் மறுத்து வருகிறது. கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 3 நாள்களாகியும், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் பாக். விடாப்பிடியாக இருந்து வருகிறது. பூர்ணம் குமாரை மீட்க BSF பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பாக். தளபதி அளவிலான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
News April 27, 2025
நடிகையா, சச்சின் மகளா? கில் கொடுத்த விளக்கம்

கடந்த 3 ஆண்டுகளாகவே சிங்கிளாக இருப்பதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் சந்தித்தே இருக்காத பெண்களுடன் கூட தன்னை தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவதாகவும், தன்னுடைய முழுக்கவனமும் தற்போது கிரிக்கெட்டில் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சச்சின் மகள் சாரா மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகியோருடன் கில் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் பரவின.
News April 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 319 ▶குறள்: பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். ▶பொருள்: அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.